இந்தியாவின் முன்னணி பாடகர்களில் மிகப்பெரும் ஜாம்பவானாக , கிட்டத்தட்ட 50 ஆண்டுகளளாக இருந்து வந்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.தனது காந்தக்குரலால் பல இதயங்களை மயக்கும் மகிமை கொண்டவர்.15 மொழிகளில் 40 ஆயிரம் பாடல்களைப் பாடியுள்ளார் ஒரே நாளில் 19 தமிழ் பாடல்களைப் பாடி சாதனை படைத்துள்ளார். மேலும் 40 படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

எம்.எஸ்.விஸ்வநாதன்,இளையராஜா போன்றவர்கள் தொடங்கி ஏ.ஆர்.ரஹ்மான்,அனிருத்,இமான் என்று தற்போதைய ஜெனரேஷன் இசையமைப்பாளர்கள் வரை அனைவருடனும் பணியாற்றியுள்ளார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.மேலும் சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து அசத்தியுள்ளார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

ஆகஸ்ட் 5-ம் தேதி எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.கடந்த ஒரு மாதமாக தீவிர சிகிச்சையில் இருந்து வந்தார் எஸ்.பி.பி,சில நாட்களுக்கு முன் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.ஆனால் நேற்று திடிரென்று இவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று செப்டம்பர் 25ஆம் தேதி மதியம் எஸ்.பி.பி காலமானார் என்ற செய்தி கேள்விப்பட்டு பல ரசிகர்கள்,பிரபலங்கள் என்று இந்தியாவே சோகத்தில் மூழ்கியுள்ளது.எஸ்.பி.பி குறித்த தங்கள் நினைவுகளையும்,இரங்கல்களையும் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.SPB-யின் பண்ணைவீட்டில் அவரது இறுதி சடங்குகள் அரசு மரியாதையோடு நடைபெற்றது.அவரது பார்ம் ஹவுஸில் தமிழக அரசு அறிவித்தபடி 72 குண்டுகள் முழங்க காவல்துறையின் மரியாதையுடன் எஸ்.பி.பி-யின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஜெய்ப்பூரில் ஷூட்டிங்கில் இருந்ததால் எஸ்.பி.பி.யின் இறுதி சடங்கிற்கு வரமுடியாத விஜய்சேதுபதி,டாப்ஸீ,ராதிகா உள்ளிட்ட படக்குழுவினர் , ஷூட்டிங் நடக்கும் இடத்திலேயே எஸ்.பி.பி யின் படத்திற்கு மலர் தூவி , தங்கள் இறுதி மரியாதையை செலுத்தியுள்ளனர்.

#SPBalasubrahmanyam a tribute by the unit in Jaipur @VijaySethuOffl #TapseePannu #rajendraprasad pic.twitter.com/14cqwMxNR2

— Radikaa Sarathkumar (@realradikaa) September 26, 2020

என்றும் உங்கள் நினைவுகளில் #SPB Rip 😭😭😭@Bulletvikki @VijaySethuOffl @taapsee @realradikaa @ActorMadhumitha pic.twitter.com/I0wkKzOflC

— Pavendh Palamuthy (@pavendh1243) September 26, 2020