XB ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகிய திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஷாந்தனு, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், தீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இதனிடையே நேற்று முன் தினம் மாஸ்டர் படத்தின் ஆடியோ லான்ச் சென்னை லீலா பேலஸில் அசத்தலாக நடைபெற்றது. வழக்கம் போல் தளபதியின் பேச்சுக்கு அரங்கமே அதிர்ந்தது. பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.

படத்தில் விஜய் சேதுபதியின் பெயர் பவானி என்பது தெரியவந்தது. படத்தில் இடம்பெற்ற பொளக்கட்டும் பற பற பாடலின் மூலம் பவானி என்பது தெரியவந்தது. சந்தோஷ் நாராயணன் பாடிய இந்த பாடல் வரிகளை துணை இயக்குனர் விஷ்ணு எழுதியுள்ளார்.