தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் மாஸ்டர் படத்தில் நடித்துவருகிறார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.பிப்ரவரி 14 அன்று மாஸ்டர் படத்தின் முதல் பாடலான குட்டிக்கதை பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர்.

இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த ஷூட்டிங்கில் சென்று விஜய்,விஜய்சேதுபதி மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோரை சந்தித்துள்ளார் பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ.இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.