தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் 15ஆம் தேதி நடைபெற்றது.

கொரோனா பாதிப்பு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.தற்போது இந்த படம் தமிழ்,தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி,கன்னடா உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

#Master #MovieTrivia @actorvijay @Team_VijaySethu
@Dir_Lokesh @Jagadishbliss @Lalit_SevenScr @MalavikaM_ @XBFilmCreators #kuttistory #Vijay #simran pic.twitter.com/hUcOz0Lkv4

— INOX Leisure Ltd. (@INOXMovies) April 21, 2020