தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான வேர்ல்ட் பேமஸ் லவ்வர் படம் சுமாரான வரவேற்பை பெற்றுள்ளது..இதனை தொடர்ந்து இவர் பிரபல இயக்குனர் பூரி ஜெகன்னாத்துடன் ஒரு படத்தில் இணைகிறார்.



இந்த படத்தினை பூரி ஜெகன்நாத்,சார்மீ,கரண் ஜோகர் உள்ளிட்டோர் தயாரிக்கின்றனர்.இந்த படத்தில் அனன்யா பாண்டே,ரம்யா கிருஷ்ணன்,ரோனித் ராய் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த படத்திற்கு ஃபைட்டர் என்று பெயரிட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.



இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.மும்பையில் நடைபெற்று வந்த இந்த முதற்கட்ட படப்பிடிப்பு 40 நாட்களை அடுத்து தற்போது நிறைவுக்கு வந்துள்ளது என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

#PJ37 #VD10 Pan India film completes 40 days shoot & finished crucial scenes on lead cast @TheDeverakonda @ananyapandayy @meramyakrishnan @RonitBoseRoy & Ali in Mumbai.
🎬@purijagan
💰@karanjohar @Charmmeofficial @apoorvamehta18 @DharmaMovies @PuriConnects #PCfilm @DoneChannel1 pic.twitter.com/GURqup5eaq

— Done Channel (@DoneChannel1) March 8, 2020