வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான சென்னை 28 திரைப்படம் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இப்படம் வெளியாகி 13 வருடங்களாகியும், அனைவரும் கொண்டாடும் திரைப்படமாக அமைந்துள்ளது.

சுண்ணாம்பு காவாய்.. மன்னித்து கொள்ளவும் இந்த விசாலாட்சி தோட்டம் RA புரத்திற்கென அதிக எமோஷன் உண்டு. மளிகை கடை சீனு, ராக்கர்ஸ் ரகு, பேட் செண்டிமெண்ட் கோபி, ரொமான்டிக் ஹீரோ கார்த்திக், ஏரியா டான் குணா, ஆஸ்தான கீப்பர் அரவிந்த், பாசமிகு அண்ணன் பழனி, டாடிஸ் லிட்டில் பிரின்சஸ் செல்வி என பல கேரக்டர்களை கண் முன் கொண்டு நிறுத்தியிருப்பார். சலூன் கடை மனோகர் ... சாரி ஷார்க்ஸ் அணியின் மேனேஜரை குறிப்பிட மறந்துவிட்டோம். சென்னை 28 மூன்றாம் இன்னிங்ஸை காண மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர் ரசிகர்கள்.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செயல்திறன் ஆய்வாளர் லக்ஷ்மி நாராயணன், படத்தின் இரண்டாம் பாகத்தை பாராட்டிவிட்டு, லாக்டவுனிற்கு பிறகு மூன்றாம் பாகம் எடுக்க வாய்ப்பிருக்கிறதா ? என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு, மிகவும் நன்றி சார். இப்போதைக்கு எந்த திட்டமும் இல்லை... என்று கூறியுள்ளார். லாக்டவுனுக்கு பிறகு STR வைத்து மாநாடு படத்தின் படப்பிடிப்பில் கவனம் செலுத்த உள்ளார் வெங்கட் பிரபு.

Catching up on #Chennai28 Part 2 again after a long time 😃 must say It is definitely as good as the first part @vp_offl 👌 The @ChennaiIPL connect too also was too good. Any chance for part 3 after the lockdown ?

— Lakshmi Narayanan (@lakshuakku) May 15, 2020