தமிழகத்தின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் STR.கடைசியாக சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து STR , ஹன்சிகா நடிக்கும் மகா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.வெங்கட் பிரபுவின் மாநாடு,பத்துதல,கெளதம் மேனன் இயக்கத்தில் ஒரு படம்,நடிகர் சங்கத்திற்காக ஒரு படம் என்று செம பிஸியாக இருக்கிறார் சிம்பு.

இவரது மாநாடு படத்தின் ரிலீஸ் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதனை தொடர்ந்து வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் படத்தினை கெளதம் மேனன் இயக்குகிறார்.இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

விண்ணைத்தாண்டி வருவாயா,அச்சம் என்பது மடமையடா படங்களை அடுத்து சிம்பு கெளதம் மேனன்,ரஹ்மான் உள்ளிட்டோர் இணைவதால் படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது.இந்த படத்திற்கு நதிகளிலே நீராடும் சூரியன் என்று பெயரிட்டிருந்தனர்.இந்த தலைப்பு படத்திற்கு செட் ஆகவில்லை என்று யோசித்த டைட்டிலை மாற்ற முடிவு செய்தனர்.

இதன்படி தற்போது இந்த படத்தின் புதிய டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.வித்தியாசமான தோற்றத்தில் சிம்பு இருக்கும் ஃபர்ஸ்ட்லுக்குடன் வெந்து தணிந்தது காடு என்ற டைட்டிலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.சிம்புவின் வித்தியாச தோற்றத்தில் இருக்கும் இந்த ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது

#VendhuThanindhathuKaadu
Directed by @menongautham
An @arrahman musical &
Produced by @VelsFilmIntl #VTK #SilambarasanTR pic.twitter.com/K2gobu2ZvQ

— Silambarasan TR (@SilambarasanTR_) August 6, 2021