தமிழ் திரையுலகின் மக்கள் செல்வியாக திகழ்பவர் வரலக்ஷ்மி சரத்குமார். தரமான ஸ்கிரிப்ட்டுகளை தேர்ந்தெடுத்து அதில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது இருக்கும் சினிமா ட்ரெண்டில், போல்டான கதாபாத்திரங்களை நடிக்கிறார் வரலக்ஷ்மி. தளபதி விஜய்யுடன் சர்க்கார் படத்திலும், தனுஷுடன் மாரி 2 படத்திலும் துணிச்சலான ரோலில் நடித்திருந்தார். இறுதியாக வெல்வெட் நகரம் எனும் படத்தில் நடித்திருந்தார்.

லாக்டவுன் காரணமாக கிடைத்துள்ள இந்த நேரத்தை வரலட்சுமி தனது வீட்டிலேயே செலவழித்து வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அவர் பல சமூகப் பிரச்சினைகள் பற்றி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். சமீபத்தில் லைஃப் ஆஃப் பை எனும் பேக்கரி கம்பெனியை துவங்கி செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் வெளியூர் செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கி உதவி செய்தார் வரலக்ஷ்மி. சமூக வலைதளங்களில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசுவது மட்டுமின்றி அதிக தேவை இருக்கும் மக்களுக்கும் அவர் உதவி வருகிறார். சேவ் சக்தி (Save Shakti) பவுண்டேஷன் சார்பாக பசியால் வாடும் நாய், மாடு உள்ளிட்ட வாயில்லா ஜீவன்களுக்கும் வரலட்சுமி சரத்குமார் அவரது தாய் சாயா தேவி உணவளித்தும், மருத்துவ உதவிகளையும் செய்து வருகிறார்கள்.

வரலக்ஷ்மியின் நடிப்பில் டேனி திரைப்படம் வெளியானது. நேரடியாக Zee5 தளத்தில் வெளியான இந்த படம் அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்தை சந்தான மூர்த்தி இயக்கியிருந்தார். பிஜி மீடியா வொர்க்ஸ் சார்பில் ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இப்படத்தை தயாரித்தார். இப்படத்தில் வரலட்சுமியுடன் சாயாஜி ஷிண்டே, வேல ராமமூர்த்தி, அனிதா சம்பத் ஆகியோர் நடித்தனர். க்ரைம் திரில்லராக உருவான இப்படத்தில் வரலட்சுமி செய்த ஸ்டண்ட் காட்சிகள் பெரிதும் பேசப்பட்டது.

இந்நிலையில் தனது செல்லப்பிராணியுடன் விளையாடி புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Happy Sunday...Sending everyone loads of positivity and love for the week..muaaaahhhhhhh loads of kisses and hugs..luv JLO and Me pic.twitter.com/DUWytVRJxR

— 𝑽𝒂𝒓𝒂𝒍𝒂𝒙𝒎𝒊 𝑺𝒂𝒓𝒂𝒕𝒉𝒌𝒖𝒎𝒂𝒓 (@varusarath) August 23, 2020