வைபவ் நடிப்பில் உருவாகிய திகில் திரைப்படம் காட்டேரி. வித்தியாசமான திகில் படமாக தயாராகி வரும் இப்படத்தை ஞானவேல்ராஜா தனது ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். இப்படத்தை டீகே இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் ஹாரர் காமெடி படமான யாமிருக்க பயமே படத்தை இயக்கியிருக்கிறார்.

இதில் வைபவ், வரு சரத், சோனம் பாஜ்வா, கருணாகரன், ஆத்மிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கொடூரமான பெயர் உள்ள பேயைத்தான் கிராமப்பகுதிகளில் காட்டேரி என சொல்வதுண்டு அந்த அடிப்படையில் இப்படமும் பயங்கர த்ரில்லாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இப்படம் வரும் ஏப்ரல் 17-ம் தேதி வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அரண்மனை, காஞ்சனா போன்ற படங்கள் வரிசையில் இந்த படமும் இடம்பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.