இயக்குனர் செல்வராகவனின் உதவியாளரான யுவராஜ் சுப்பிரமணி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டாணா. தரமான ஸ்கிரிப்ட்டுகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் வைபவ் இதில் நாயகனாக போலீஸ் ரோலில் நடிக்கிறார். நோபிள் மூவி ப்ரொடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.

.

நந்திதா ஸ்வேதா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் யோகிபாபு,பாண்டியராஜன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சிவா GRN ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

.

சமீபத்தில் இதன் ட்ரைலர் வெளியாகி இணையத்தை ஈர்த்தது. இன்று வெளியாகிய இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது கலாட்டா குழுவிற்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார் நடிகர் வைபவ். அப்போது பேசுகையில், இந்த கதை கேட்கையில் புதிதாக இருந்தது. படத்தில் ஹீரோவுக்கு பெண் குரல் வந்து போகும் என்பதால், நானே முதலில் பெண் குரலில் பேச முயற்சி செய்தேன். சரியாக வராததால் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் வைத்து போகலாம் என்று இயக்குனர் கூறினார். மேலும் நடிகர் யோகிபாபுவுடன் பணிபுரிந்த அனுபவம் பற்றியும் பேசியுள்ளார். ஸ்பாட்டில் சில பஞ்ச்சுகள் சேர்த்து அசத்தி விடுவார் யோகிபாபு.

.