சன் டிவியில வர்ற வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் பல பிரபலங்களை Interview பண்ணி அடடே இந்த பொண்ணு சூப்பரா கேள்வி கேக்குதேன்னு நிறைய பேரை யோசிக்க வெச்சவங்க தான் பூஜிதா தேவராஜு.இப்போ Recent-ஆ ட்ரெண்டிங்-ல இருக்குற நவம்பர் ஸ்டோரி சீரிஸ்ல ஒரு சின்ன ரோல்ல நடிச்சாலும் பல பேரோட மனசுல அந்த ID கார்டு பொண்ணு நல்ல பண்ணிருக்குலன்னு பேரு எடுத்தாங்க,அடுத்தடுத்து சில சுவாரசியமான Projects ரெடியா வெச்சுருக்க பூஜிதாவை ஒரு சின்ன Phone Interview-காக பிடிச்சோம்,நவம்பர் ஸ்டோரியோட வெற்றிக்கு வாழ்த்துக்கள் சொல்லிட்டு அவங்ககிட்ட சில கேள்விகள் முன்வைச்சோம் பல சுவாரசியமான விஷயங்களை அவங்க பகிர்ந்துக்கிட்டாங்க என்ன என்ன சொல்லிருக்காங்கண்ணு வாங்க பார்க்கலாம்

மீடியாவிற்குள் வந்தது எப்படி...Anchor to Actor transition தொடங்கியது எப்படி அது பத்தி சொல்லுங்க...?

என்னோட Master Degree Journalism and Mass Communication தான் நியூஸ் சேனல்ல சேரணும்னு தான் First ஸ்டார்ட் பண்ணேன்.அப்பறம் அப்டியே யூடியூப் சேனல் வீடீயோஸ்,சன் டிவியோட வணக்கம் தமிழான்னு ஒரு பிரேக் கிடைச்சது..ஆக்ட்டிங் அப்படி தான் சில வீடியோஸ் நடிக்க ஆரம்பிச்சு அப்டியே பிக்கப் ஆகியிருக்கு.நவம்பர் ஸ்டோரியுமே அடுத்த நாள் ஷூட்டிங்னா முந்துன நாள் சொன்னாங்க.ஒரு சில சீன் தான் நடிச்சாலும் அதுக்கு மக்கள் கொடுக்குற வரவேற்பு ரொம்ப சந்தோசமா இருக்கு.

முதல் வாய்ப்பே பசுபதி போன்ற பெரிய நடிகரோடு...அந்த அனுபவம் பற்றி சொல்லுங்க...?

எனக்கு பொதுவா கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் ரொம்ப புடிக்கும், ஒரு ரோல்ன்னு இல்லாம எந்த கேரக்டர் கொடுத்தாலும் கலக்குவாங்க.பசுபதி சார்,பிரகாஷ் ராஜ் சார்,எம் எஸ் பாஸ்கர் சார்,மனோரமா ஆச்சின்னு இவங்கல்லாம் எது பண்ணாலும் மக்கள் ஏத்துப்பாங்க அந்த மாதிரி நம்மளும் ஆகணும்னு நெனச்சுருக்கேன்.பசுபதி சாரோட ரொம்ப பெரிய ரசிகர் நான் திருப்பாச்சி படத்துல பட்டாசு பாலு கேரக்டர் எனக்கு ரொம்ப புடிக்கும் எப்போ தீபாவளி வந்தாலும் நான் பேசமாட்டேன் என் பாட்டாசுதான் பேசனும்னு இன்னும் சொல்லிட்டு இருப்பேன்.

இதுதவிர விருமாண்டி ஆகட்டும்,அருள்,வெயில்,வெடிக்குண்டு முருகேசன்னு பல படங்கள் என்னோட Favourite.நவம்பர் ஸ்டோரில அவர் கூட நடிக்கணும்னு சொன்னப்போ அப்டியே துள்ளிகுதிச்சேன் சந்தோஷத்துல,அதுலயும் அவர் கையால சாகப்போற சீனுக்கு ரொம்ப வெயிட் பண்ணேன் சில காரணங்களால அந்த சீன் ஷூட் பண்ண முடியல.

ஷூட்டிங்கில் அவர்கிட்ட நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன்,ரொம்ப ஜாலியா எந்த ஒரு பந்தாவும் இல்லமா எங்ககிட்டலாம் பேசுவாரு,நிறைய காமெடியா பண்ணுவாரு செட்ல இருக்கவங்க சீரியஸா இருந்தாலும் அவங்கள சில் பண்ணுவாரு,என்கிட்ட அந்த ID கார்டு எதுக்கு வாங்கவரனும் எதுக்கு என் கையால சாகணும்னு கலாய்ச்சுட்டே இருப்பாரு.

தமன்னா கூட இந்த சீரிஸ்ல நடிக்கல,ஷூட்டிங் ஸ்பாட்ல அவங்களோட பேசிருக்கீங்களா...? அவங்க Chief Guest-ஆ இருந்த நிகழ்ச்சி நீங்க Host பண்ணீங்க அந்த அனுபவம் பற்றியும் சொல்லுங்க...?

இந்த சீரிஸ்ல அவங்க கூட நடிக்க வாய்ப்பு கிடைக்கல,கடைசி நாள் ஷூட்டில எல்லாரும் கலந்துக்கிட்டோம் அப்போ மட்டும் அவங்கள மீட் பண்ணேன் அப்போவும் பெருசா பேச முடியல.ரெண்டு வர்ஷம் முன்னாடி ஒரு காலேஜ் Function-ல அவங்கள மீட் பண்ணேன் , ரொம்ப Simple செம Humble அவங்களோட அந்த Quality தான் அவங்கள அந்த இடத்துல வெச்சுருக்கு எல்லாரையுமே ஒரே மாதிரி ட்ரீட் பண்ணாங்க அதெல்லாம் பார்த்து ரொம்ப வியந்து போயிருக்கேன்.

Anchor or Actor எதுவாக இருக்க உங்களுக்கு மிகவும் புடிச்சிருக்கு...?

ரெண்டுமே ரெண்டு கண்ணு மாதிரி தான் எனக்கு ரெண்டுமே ரொம்ப பிடிக்கும்.என்ன பண்ணாலும் Dedicated ஆக பண்ணனும்னு நிறைய மெனக்கெடுவேன்.ஆக்டரா இருக்கப்போ என்னால நிறைய Explore பண்ண முடியும்,என்னால பண்ண முடியாத பல விஷயங்கள் ட்ரை பண்றேன் , அதுனால Challenging-ஆ இருக்கும்னு வேணும்னா சொல்லலாம்.

நீங்க எடுத்ததுலயே உங்களுக்கு ரொம்ப பிடிச்ச இன்டெர்வியூ...?

ரஹ்மான் சார் இண்டெர்வியூ தான்.ARR பக்தன் நான் So அவரை இண்டெர்வியூ செய்யப்போறோம்னதும் ஒரு பயம் கலந்த பொறுப்பு இருந்தது,அந்த Excitment-ல அன்னைக்கு நைட் எல்லாம் நான் தூங்கவே இல்ல.ஆனா அவரு அவ்ளோ பெரிய ஆளுன்னு காட்டிகவே இல்ல ரொம்ப கேசுவலா,கூலா எங்ககிட்ட எல்லாம் பேசுனாரு,மைக் ஒர்க் ஆகுதான்னு பாக்குறப்போவே எல்லாரையும் கலாய்ச்சு செம ஜாலியா ஆகிட்டாரு நாங்களும் அவர்கிட்ட எப்போவும் போல இல்லாம அவருக்கு புடிச்ச விஷயங்கள் பத்திலாம் கேட்டோம்.இண்டெர்வியூ முடிச்சுட்டு நைஸ் ஜாலியா பேச வெச்சுட்டீங்கனு சொல்லிட்டு போனாரு அதெல்லாம் லைப்ல மறக்க முடியாத விஷயம்.

One on One Interview எடுக்கணும்னு நினைக்கிற ஒரு celebrity...?

தளபதி விஜயோட பெரிய ஃபேன்.அவர் ரொம்ப அமைதிங்கிறத தாண்டி அவருக்குள்ள ஒரு செம ஜாலியான குழந்தைத்தனமான ஒரு கேரக்டர் இருக்குன்னு அவருக்கு நெருக்கமானவங்க சொல்லிருக்காங்க,அவரோட செம கேசுவலா ஒரு காபி டேபிள் இண்டெர்வியூ பண்ணனும்னு எனக்கு ரொம்ப ஆசை.அதுல அவரை நிறைய பேசவைக்கணும் , கில்லி விஜயை எனக்கு ரொம்ப பிடிக்கும் அந்த துறுதுறு விஜயை வெளிய கொண்டுவரனும்.

அதுதவிர நம்மளவிட்டு போன நிறைய பேர் கிட்ட இண்டெர்வியூ பண்ணனும்னு ஆசை.எனக்கு இந்த ஒரு கேரக்டர்ன்னு இல்லாமால் எல்லா கேரக்டரும் ஈஸியா பண்றவங்களை ரொம்ப பிடிக்கும், நாகேஷ் சார்,மனோரமா ஆச்சி இப்படி நிறைய Legends கூட இண்டெர்வியூ பண்ணனும்னு ரொம்ப ஆசை.

Anchor-ஆ வாங்குன கொடூரமான Bulb...?

சன் டீவில சதிஷ் என்னை prank பண்ணுவாரு அது தான் ரொம்ப மோசமான Bulb.என்ன நடக்குதுன்னே தெரியாம அழுதுட்டேன்.இதுதவிர அப்பப்போ Riddles-லாம் சொல்லுவாங்க அது புரியாம நிறைய பல்பு வாங்கியிருக்கேன்.

Instagram உங்களோட வளர்ச்சிக்கு எந்த அளவுக்கு உதவி பண்ணிருக்கு...?

எனக்கு மிகப்பெரிய Boost-ஆ இருந்தது இன்ஸ்டாகிராம் தான் என்னை அடுத்தகட்டத்துக்கு கொண்டுபோக ரொம்ப ஹெல்ப் ஆக இருந்தது.எனக்கு என்னோட Friend தான் Account ஓபன் பண்ணி கொடுத்ததே , First பெருசா ரீச் இல்ல ஆனா என்னோட Work கொஞ்சம் கொஞ்சமா ஹிட் ஆக நல்ல ரீச் கிடைச்சது.போட்டோஷூட்ஸ் சும்மா ஜாலியா பண்ணோம் அதுக்கும் பெரிய ரீச் கிடைச்சது.

பூஜிதாவை நிறைய பேர் Follow பன்றாங்க நீங்க Follow பண்ற டாப் 5 Profiles...?

அப்படி தனியா எதுவும் இல்லை.நான் பெரிய Meme பைத்தியம் இன்ஸ்டாகிராம்ல இருக்க Meme Page எல்லாத்தையும் Follow பண்ணிருப்பேன்.News சேனல்,Updates எது தெரிஞ்சுக்கணும்னாலும் Memes பார்த்தாலே போதும்,எவ்வளவு பெரிய விஷயமா இருந்தாலும் சிம்பிளா நமக்கு புரியுற மாதிரி சொல்லுவாங்க.

Memes-ல தானே வாழ்ந்துட்டு இருக்கோம் , காலேஜ் படிக்கிறப்போ இருந்தே நான் செம ஜாலியா நிறைய டயலாக் பேசிட்டே தான் இருப்பேன்.வாயை தொறந்தாலே எதாவது சினிமா டயலாக் தான் வரும் , என்ன வெச்சு ரேடியோல வரமாதிரி ஒலிச்சித்திரம் நடத்தலாம் அந்த அளவு இம்சை அரசன்ல வர புறா சீன்,அந்நியன் ஸ்டார்டிங் சீன் ஆரம்பிச்சு TTR சீன் வர,கில்லி படைத்தோட பூரி சீன் இப்படினு எல்லாத்தையும் நடிச்சுக்கிட்டு இருப்பேன்.இப்போவும் நம்ம பேசுற நிறைய டயலாக்லாம் Meme-ல இருந்து வர்றது தான் அந்தளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திருக்கு.

Traveler or Foodie...?

ரெண்டுமே எனக்கு ஒரு hobby தான்.அப்பா ஆர்மி ஆபிசர் அவரோட சேர்ந்து நிறைய சின்ன வயசுல இருந்தே ட்ராவல் பண்ணிருக்கேன்.அதோட சேர்ந்தே Variety ஆன சாப்பாடும் சேர்ந்தே வரும் So ரெண்டையும் பிரிக்க முடியாது.அப்படி நிறைய சுத்திருக்கேன் and நிறைய சாப்பிட்ருக்கேன்.

நிறைய சாப்பாடு பத்தின ஸ்டோரி ஷேர் பண்றீங்க....சமையல் எப்படி...?

எனக்கு சமையல்னா ரொம்ப பிடிக்கும் ,சின்ன வயசுல இருந்தே நிறைய சமைச்சு பழகிட்டேன்.Organic,Healthy உணவுகளா சாப்பிடணும்னு ட்ரை பண்ணிட்டு இருக்கேன் முடிஞ்சளவு அதற்கு ஏற்றவாறு நடந்துடும் இருக்கேன்.புதுசு புதுசா எதாவது ட்ரை பண்ணி என்னோட இன்ஸ்டால போடுவேன் உடனே நிறைய பேர் குக் வித் கோமாளிக்கு ஆள் ரெடின்னு கமெண்ட் பண்ணிறாங்க.

சமையல் பத்தி சொல்லியாச்சு உங்க சேனல்ல வரப்போற புது ஷோ பத்தி சொல்லாட்டி எப்படி Masterchef மக்கள்செல்வன் எவ்ளோ ஆர்வமா இருக்கிங்க...?

நம்ம ஊரு ஹீரோக்கு அப்பறம் விஜய்சேதுபதி திரும்ப சன் டீவியோட சேர்ந்து ஒரு ஷோ பன்றாரு,அதுவும் சமையல் ஷோ , ப்ரோமோலாம் ஷூட் பண்ணிட்டாங்க லாக்டவுன் முடிஞ்ச அப்பறம் சீக்கிரமே டெலிகாஸ்ட் ஆகும்,உங்கள மாதிரியே நானும் ஆவலா காத்திட்டு இருக்கேன்.

Fav டிவி ஷோஸ்...?

நான் பெரிய Crime Thriller ஃபேன் So அப்படிப்பட்ட படங்கள்,ஷோஸ் தான் அதிகமா பார்ப்பேன் Pshycological thriller,Army,Space இதுபத்தி எது இருந்தாலும் பார்த்திருவேன்,திக் திக் நிமிடங்கள் நிறைந்த எதுவா இருந்தாலும் எனக்கு ரொம்ப புடிக்கும்.

தளபதி விஜயோட பெரிய பேன் நீங்க,அவர் உங்க ஆபீஸ்க்கு இப்போ தளபதி 65 ப்ரோமோ காக வந்திருந்தார் அப்போ அவரை மீட் பண்ண சான்ஸ் கெடச்சுதா...?

ரெண்டு தடவையுமே மிஸ் பண்ணிட்டேன் , சர்கார் சீன் எடுத்ததுக்கு அடுத்த நாள் தான் இன்டெர்வியூ போனேன் அப்போ அங்க இருந்த எல்லாருமே நேத்து தான் ஷூட்டிங் நடந்ததுன்னு சொன்னாங்க,ஆஹா எவ்ளோ பெரிய சான்ஸ் போச்சேன்னு இருந்தேன் ஆனால் அன்னைக்கு அவரை நேர்ல பார்த்திருந்தாலும் அங்கேயே Excitment-ல மயங்கி விழுந்துருப்பேன்னு சொல்லிட்டு இருந்தேன்.இப்போ தளபதி 65 ப்ரோமோ ஷூட் எடுத்தப்பவும் அதே கதை தான்,அன்னைக்குனு எனக்கு ஷூட் அன்னைக்கும் மிஸ் பண்ணிட்டேன் சீக்கிரமே அவர பார்க்கணும்.

பூஜிதாவின் அடுத்தகட்ட திட்டங்கள்...?

2-3 படம்,சீரிஸ்லாம் நடிச்சிருக்கேன் எல்லாமே Thriller Based ஸ்கிரிப்ட் தான்.சீக்கிரம் ரிலீஸ் ஆகும்ன்னு நினைக்கிறேன் இருக்குற Situation பொறுத்து எப்படி ரிலீஸ் ஆகுதுன்னு பார்க்கணும்.சீக்கிரமே அந்த Projects பத்தின Official Updates வரும்.

ஒரு தொகுப்பாளினியா தன்னோட வெற்றியை பதிச்சு பல மக்கள் மனசுல இடம்பிடிச்ச பூஜிதா முன்னணி தொகுப்பாளினியா இன்னும் ஒரு பெரிய இடத்துக்கு போகணும்,ஒரு நடிகையாகவும் அவங்க ஆசைப்பட்ட மாதிரியே வித்தியாசமான கதாபாத்திரங்கள் நடிச்சு பெரிய வெற்றியை அடையணும்னு கலாட்டா சார்பா வாழ்த்துக்களை தெரிவிச்சுக்குறோம்.