உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக தமிழக அரசு சார்பில் விழிப்புணர்வு வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகை த்ரிஷா விழிப்புணர்வு வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

கொரோனா வைரஸ் நம்மை பாதிக்காமல் இருக்க தடுத்துக் கொள்ள முடியும். அதற்கு நாம் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு இருமல் அல்லது தும்மல் வந்தால் உடனே கர்சீப் அல்லது டிஷ்யூ பேப்பர் எடுத்து வாயை மூடிக்கொள்ள வேண்டும். பயன்படுத்தப்பட்ட டிஷ்யூ பேப்பர்களை குப்பைத் தொட்டியில் போட்டு மூட வேண்டும்.

உங்கள் கண், மூக்கு, வாய் ஆகியவற்றை தேவையில்லாமல் தொடக்கூடாது. அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். அதிக கூட்டமாக இருக்கும் இடத்தில் இருப்பதை தவிர்க்கவும். உங்களுக்கு இருமல் அல்லது காய்ச்சல் இருந்தால் அல்லது மூச்சு விடுவதற்கு சிரமமாக இருந்தால் மற்றவர்களுடன் பழகுவதை தவிர்க்க வேண்டும். மேலும் உடனே உங்களுக்கு பக்கத்தில் இருக்கும் சுகாதார மையத்தை அல்லது மருத்துவரிடம் சென்று பார்க்க வேண்டும். அப்போது முக கவசம் போட்டுக் கொள்ள வேண்டும்

மேலும் விவரங்கள் தமிழ்நாடு பொது சுகாதார மையத்தை தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு கொரோனா விழிப்புணர்வு குறித்து நடிகை திரிஷா கூறியுள்ளார்.

உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் #Coronavirus வைரஸிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது?
@trishtrashers #UNICEF India நல்லெண்ண தூதர் என்ன சொல்கிறார் என்பதை கேளுங்கள்.
#COVID19 க்கு எதிராக பாதுகாப்பாக இருங்கள்.@NHM_TN @DrBeelaIAS @VijayaBaskarofl pic.twitter.com/5V4E05UfhQ

— UNICEF India (@UNICEFIndia) March 19, 2020