இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனரான இயக்குனர் S.S.ராஜமௌலியின் இயக்கத்தில் பாகுபலி என்ற பிரம்மாண்ட படைப்புக்குப் பின் அடுத்த பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது RRR. திரைப்படம். RRR படத்தில் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர்களான ஜூனியர் என்டிஆர் & ராம்சரண் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மேலும் பாலிவுட் நடிகை ஆலியா பட் கதாநாயகியாக நடிக்க, அஜய் தேவ்கன் , சமுத்திரகனி, ஸ்ரேயா சரண் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். DVV என்டர்டெயின்மென்ட் சார்பில் DVV.தனயா தயாரிக்கும் RRR திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் பெண் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் வெளியிடுகின்றன.

ஒளிப்பதிவாளர் KK.செந்தில்குமார் ஒளிப்பதிவில் தயாராகும் RRR படத்திற்கு இசை அமைப்பாளர் M.M.கீரவாணி இசை அமைக்கிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் படத்தின் மேற்கின் வீடியோ சமீபத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. RRR படத்தின் முதல் பாடலாக நட்பு என்னும் பாடல் தமிழ் தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட இந்தியாவின் ஐந்து மொழிகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்நிலையில் RRR படத்தின் நாயகர்கள் ராம்சரன் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் படப்பிடிப்பிற்கு காரில் சேர்ந்து பயணிக்கும் பொழுது இந்த நட்பு பாடலை ரசித்து பாடியபடியே பயணிக்கும் புதிய வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. ட்ரெண்டாகும் RRR நாயகர்களின் அந்த வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.

Spotted! Bheem and Ramaraju hooked onto the #Dosti song…🤝🤩#RRRMovie

Post a video of you and your friend listening to the song and tag us ! #Natpu #Priyam pic.twitter.com/s9IX2DnCZz

— RRR Movie (@RRRMovie) August 11, 2021