கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது.இந்தியாவிலும் இந்த நோயின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இதனை கட்டுக்குள் கொண்டுவர கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



இதனால் பல துறைகளில் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.ஷூட்டிங்குகள் எதுவும் நடக்கவில்லை,திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.நேற்று முதல் தமிழகத்தில் பேருந்துகள் இயங்க அரசு உத்தரவிட்டது.



கொஞ்சம் கொஞ்சமாக அனைத்தையும் திறக்க அரசு முயற்சித்து வருகிறது.தற்போது ஜிம்,நீச்சல் குளம்,தியேட்டர் உள்ளிட்டவற்றை பார்வையாளர்கள் இல்லாமால் திறந்து மெயின்டைன் செய்ய அரசு அனுமதி அழித்துள்ளது.இதற்கு முன் பேருந்துகளை 15 நாட்களுக்கு முன்னரே தயார் செய்யச்சொன்ன அரசாங்கம் தற்போது அதற்கு அனுமதி வழங்கியுள்ளது.இதே போல விரைவில் திரையரங்குகள் திறக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர் திரையரங்க உரிமையாளர்கள்.