கடந்த 2003-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படம் மூலம் அறிமுகமானார் தமன். நடிகராக கால்பதித்தவர் இசையமைப்பாளராக ஜொலித்தார். தில்லாலங்கடி, ஈரம், மாஸ்கோவின் காவிரி, காஞ்சனா, ஒஸ்தி, சேட்டை என பல வெற்றி படங்களுக்கு இசையமைத்தார். தமிழ் அல்லாது பிற மொழி படங்களுக்கும் இசையமைத்த தமன், தெலுங்கில் உச்சத்தை தொட்டார். அலவைகுந்தபுரமுலோ மற்றும் டிஸ்கோ ராஜா படங்களில் பட்டையை கிளப்பினார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு நேரத்தில் மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். மே 3-ம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் திரைப்பிரபலங்கள் உடற்பயிற்சி செய்வது, நடனமாடுவது, பாடல் பாடுவது, சமையல் செய்வது என நேரத்தை செலவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இசையமைப்பாளர் தமன், நண்பர்களோடு கிரிக்கெட் விளையாடும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பந்து வீச்சாளர் போடும் பந்தை சிக்ஸருக்கு விளாசுகிறார் தமன். மேலும் அப்பதிவில், காத்திருக்க முடியவில்லை...விரைவில் விளையாட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

@ahiteja⁩ ⁦@imsarathchandra⁩ let’s play soon !! Can’t wait ♥️🏏🏏🏏💪🏼 pic.twitter.com/1X6msilWRl

— thaman S (@MusicThaman) April 28, 2020