தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தை Seven Screen ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளனர்.கொரோனா பாதிப்பு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.

இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் செம ஹிட் அடித்துள்ளது.தீபாவளியை முன்னிட்டு இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படம் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு இந்த படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

கொரோனாவிற்கு பிறகு வெளியாகும் பெரிய ஹீரோ படம் என்பதால் இந்த படத்திற்கு அதீத எதிர்பார்ப்பு இருந்தது.இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.பல திரையரங்குகளுக்கு ரசிகர்களை ஈர்க்கும் படமாக மாஸ்டர் உள்ளது என்று திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்தனர்.இந்த படம் OTT-யிலும் வெளியாகி பல சாதனைகளை நிகழ்த்தியது.

இந்த படத்தின் பாடல்கள் பெரிய ஹிட் அடித்திருந்தன,தற்போது இந்த படத்தின் கானா தளத்தில் 100 மில்லியனை தாண்டி அசத்தல் சாதனையை நிகழ்த்தியுள்ளது.இந்த சாதனையை கானாவில் செய்யும் முதல் தமிழ் ஆல்பம் என்ற பெருமையையும் மாஸ்டர் பெற்றுள்ளது.இதனை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

#Master Album Became the First Ever Tamil Album to Cross the Big Number 100M+ Plays on @gaana Music Platform. Songs With 100M Plays & OST With 2M+ 😉🔥#Thalapathy @actorvijay pic.twitter.com/Ztc1oWBJFN

— Vijay Team Online (@VijayTeamOnline) May 31, 2021

#Master Album Hits 100Million+ Plays on @gaana 🔥

• Most Streamed Tamil Albums on @gaana
🔸#Master - 100M+
🔸Darbar - 75M+
🔸Petta - 71M+
🔸#Mersal - 66M+
🔸#Bigil - 63M+#Thalapathy65 @actorvijay

— Bangalore Tamil Pasanga ™ (@BTP_Offl) May 31, 2021