தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகவிருந்தது கொரோனா காரணமாக தள்ளிப்போனது.இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் நடிக்கவுள்ள திரைப்படம் தளபதி 65.இந்த படம் குறித்து பல தகவல்கள் சமூகவலைத்தளங்களில் வந்துகொண்டிருக்கின்றன.

இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்ககுகிறார் என்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கின்றனர் என்றும் ,இந்த படம் துப்பாக்கி 2வாக இருக்கலாம் என்றும் தகவல்கள் சில மாதங்களாக சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.

தற்போது சந்தோஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் துப்பாக்கி படத்தின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.இது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.சந்தோஷ் சிவன் இந்த படத்தில் இணைந்துள்ளாரா..? போன்ற கேள்விகள் ரசிகர்களிடையே எழுந்துள்ளன.இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் மாஸ்டர் படத்தின் ரிலீசுக்கு பிறகு வெளியாகும் என்று தெரிகிறது.