லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். XB பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது. மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ், தீனா, சேத்தன், கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.

கொரோனா ஊரடங்கால் மாஸ்டர் ரிலீஸை தள்ளிப்போடும் நிலை உருவானது. மாஸ்டர் திரைப்படம் நிச்சயம் திரையரங்கில் தான் வெளியாகும் என்ற ருசிகர செய்தியை தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ உறுதி செய்தார். ஏப்ரல் 9-ம் தேதி தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக மாஸ்டர் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்குள் கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் அதிகம் பரவிய காரணத்தினால் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன.

அதனால் இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தயாரிப்பாளர் தள்ளி வைத்துள்ளார். கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மாஸ்டர் திரைப்படத்தின் அப்டேட் குறித்து தினமும் ரசிகர்கள் கேட்டு வந்தனர்.

தற்போது தீபாவளி விருந்தாக டீஸர் அப்டேட்டை வழங்கியுள்ளது மாஸ்டர் படக்குழு. வரும் 14-ம் தேதி மாலை 6 மணிக்கு மாஸ்டர் டீஸர் வெளியாகவுள்ளது. இந்த டீஸர் சன் தொலைக்காட்சியில் வெளியாகிறது. டீஸர் அறிவிப்பு போஸ்டரில் விஜய் சேதுபதியின் பின்னால் இருந்து தளபதி விஜய் பார்ப்பது போல் அமைந்துள்ளது. அறிவிப்பு போஸ்ட்டரையே ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர் தளபதி ரசிகர்கள்.

ஒவ்வொரு வருடமும் தீபாவளி நாளில் தளபதி விஜய்யின் திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு இந்த வருடம் ஏமாற்றம் தான். இந்த படத்தை தொடர்ந்து கமல் ஹாசன் வைத்து விக்ரம் படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் அந்த படத்தின் டைட்டில் டீஸர் அறிவிப்பு கடந்த வாரம் கமல் ஹாசன் பிறந்தநாளில் வெளியானது.

Pakkuvama sollum podhe ketukonga chellam! 😉

Diwali treat is here! #MasterTeaser releasing on November 14th, 6pm on @SunTV Youtube channel! Have a blast Maapi! @actorvijay @VijaySethuOffl @Dir_Lokesh @anirudhofficial @MalavikaM_ #MasterUpdate #MasterTeaserFromNov14 pic.twitter.com/ze2f8VG1bL

— XB Film Creators (@XBFilmCreators) November 12, 2020