தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தை Seven Screen ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளனர்.கொரோனா பாதிப்பு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.

இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் செம ஹிட் அடித்துள்ளது.தீபாவளியை முன்னிட்டு இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படம் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஜனவரி 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த படத்தின் சென்சார் வேலைகள் நிறைவடைந்து , படத்திற்கு யூ/ஏ சர்டிபிகேட் கிடைத்துள்ளது.

விறுவிறுப்பாக ரிலீசிற்கு தயாராகி வரும் நிலையில் படத்தில் சில காட்சிகள் இணையத்தில் லீக் ஆகி படக்குழுவினருக்கு அதிர்ச்சி அளித்தது.இந்த காட்சிகளை உடனே நீக்க நடவடிக்கைகள் எடுத்த படக்குழுவினர் லீக் செய்த நபர் மீது தக்க நடவடிக்கை எடுத்தும் வருகின்றனர்.ரிலீஸிற்கு ஒரு சில நாட்களுக்கு முன் இப்படி ஒரு பெரிய படத்தில் இருந்து காட்சிகள் கசிந்தது ரசிகர்கள் மற்றும் பிரபலங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Team #Master requests you all not to forward/share any leaked content and if you come across anything of these sorts, please share it with us at report@blockxpiracy.com

— XB Film Creators (@XBFilmCreators) January 11, 2021

Dear all
It's been a 1.5 year long struggle to bring Master to u. All we have is hope that you'll enjoy it in theatres. If u come across leaked clips from the movie, please don't share it 🙏🏻 Thank u all. Love u all. One more day and #Master is all yours.

— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) January 11, 2021