தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்
இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் செம ஹிட் அடித்துள்ளது.தீபாவளியை முன்னிட்டு இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படம் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
கொரோனாவிற்கு பிறகு வெளியாகும் பெரிய ஹீரோ படம் என்பதால் இந்த படத்திற்கு அதீத எதிர்பார்ப்பு இருந்தது.இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.பல திரையரங்குகளுக்கு ரசிகர்களை ஈர்க்கும் படமாக மாஸ்டர் உள்ளது என்று திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.உலகமெங்கும் ரிலீஸாகியுள்ள இந்த படம் வசூல் சாதனை படைத்து வருகிறது.திரையரங்குகளில் வெற்றிநடைபோட்ட இந்த படம் அடுத்ததாக OTT-யிலும் வெளியானது.
இந்த படத்தின் பின்னணி இசை ரசிகர்களால் மிகவும் பாராட்டப்பட்டது.இந்த பின்னணி இசை அடங்கிய OST வீடீயோவை வெளியிட ரசிகர்கள் படக்குழுவினருக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்த படத்தின் OST விரைவில் வெளியிடப்படும் என்று அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.இதனை தொடர்ந்து ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
#MasterBGM #MasterOST gettin ready jus for you guys 🔥🔥🔥 pic.twitter.com/wT8QLCLG3m
— Anirudh Ravichander (@anirudhofficial) February 2, 2021