தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தை Seven Screen ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளனர்.கொரோனா பாதிப்பு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.

இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் செம ஹிட் அடித்துள்ளது.தீபாவளியை முன்னிட்டு இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படம் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு இந்த படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

கொரோனாவிற்கு பிறகு வெளியாகும் பெரிய ஹீரோ படம் என்பதால் இந்த படத்திற்கு அதீத எதிர்பார்ப்பு இருந்தது.இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.பல திரையரங்குகளுக்கு ரசிகர்களை ஈர்க்கும் படமாக மாஸ்டர் உள்ளது என்று திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்தனர்.இந்த படம் OTT-யிலும் வெளியாகி பல சாதனைகளை நிகழ்த்தியது.

தற்போது 2021-ல் உலகளவில் அதிகம் வசூல் செய்த படங்களின் லிஸ்ட்டை Boxofficemojo வெளியிட்டுள்ளனர்.இந்த வரிசையில் தளபதி விஜயின் மாஸ்டர் 45ஆவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.இந்த லிஸ்டில் முதல் 50 இடங்களில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய படம் என்ற பெருமையை மாஸ்டர் பெற்றுள்ளது

#Master holds 45th Spot at "2021 Worldwide Box Office" Chart in #BoxOfficeMojo. It's the Only Indian Film to reach the TOP 50 Spot on Worldwide Charts.#Beast #Master @actorvijay pic.twitter.com/7xTUtaEaYX

— Bangalore Tamil Pasanga ™ (@BTP_Offl) July 22, 2021