தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் 15ஆம் தேதி நடைபெற்றது.

இந்த படத்தை Seven Screen ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளனர்.கொரோனா பாதிப்பு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.சமீபத்தில் விஜயின் பிறந்தநாளுக்கு ஒரு ஸ்பெஷல் போஸ்ட்டரை மாஸ்டர் படக்குழு வெளியிட்டனர்.இந்த போஸ்டரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் செம ஹிட் அடித்துள்ளது.கொரோனா பாதிப்பு குறைந்த பின் இந்த படம் நிச்சயம் திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தீபாவளியை முன்னிட்டு இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

டீஸர் வெளியாகி பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. 2 மில்லியன் லைக்குகளை பெற்று இந்த சாதனையை படைக்கும் முதல் தென்னிந்திய படத்தின் டீஸர் என்ற பெருமையை படைத்தது.40 மில்லியன் பார்வையாளர்களுடன் 2.4 மில்லியன் லைக்குகளை பெற்றுள்ள இந்த டீஸர் அதிகம் லைக் செய்யப்பட்ட தென்னிந்தியாவின் டீஸர்/ட்ரைலர் என்ற பெருமையை பெற்றுள்ளது.

இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் சமீபத்தில் மீண்டும் உறுதி செய்தனர்.இந்த படம் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் என்று தகவல்கள் கிடைத்துள்ளது.இந்த படம் ஜனவரி 13ஆம் தேதி வெளியாகும் என்ற தகவலும் கிடைத்திருந்தது.தற்போது இந்த படத்தின் நீளம் 3 மணி நேரம் என்றும் படத்தில் மையக்கதை கல்லூரியில் குடிகார வாத்தியாராக இருக்கும் விஜய் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்படுவதாகவும் ,அந்த பள்ளியை தவறாக பயன்படுத்தும் விஜய்சேதுபதிக்கும் விஜய்க்கும் மோதல் ஏற்படுகிறது என்று ஒரு துபாய் டிக்கெட் புக்கிங் சைட்டில் பதிவிடப்பட்டுள்ளது,இது எந்தளவு உண்மை என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்

#Master run time 180 Mins ...@actorvijay pic.twitter.com/e4qXhzFHgu

— Iʀsʜᴀᴅ (@irshad5005) December 22, 2020