உலகையே அச்சுறுத்தி வரும் COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.தமிழகத்தில் இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் அதனை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு தங்களால் முடிந்த வேலைகளை செய்து வருகின்றனர்.

.



கொரோனா குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இதனால் பலதரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.



தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம்,முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம்,ஆந்திரா,தெலுங்கானா,கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகியவற்றின் நிவாரண நிதிகளுக்கு தலா ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.1.30 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.இது தவிர தனது ரசிகர்மன்றங்களுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும்படி ஒரு குறிப்பிட்ட தொகையை அனுப்பியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

.

@actorvijay @Jagadishbliss pic.twitter.com/gCu4Lar78K

— Bussy Anand (@BussyAnand) April 22, 2020