TRP மக்கள் அதிகம் விரும்பி பார்க்கும் கணக்கை வைத்து BARC நிறுவனம் வாராவாரம் நாடுமுழுவதும் வெளியிட்டு வருவார்கள்.மக்கள் மத்தியில் ஒரு நிகழ்ச்சி பிரபலமாக உள்ளதாக இல்லையா என்பதை இதனை வைத்து தான் தெரிந்துகொள்ள முடியும் அதன் அடிப்படையில் புதிய தொடர்களும் நிகழ்ச்சிகளும் ஒளிர்ப்படும்.

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த வருடம் சினிமா மற்றும் சின்னத்திரை பெரிய பாதிப்பை சந்தித்தது.முழு முடக்கம் காரணமாக ஷூட்டிங்குகள் ரத்து செய்யப்பட இந்த நேரத்தில் பழைய தொடர்களையும்,நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வந்தனர்.

கொரோனா பாதிப்பு குறைந்த பின் ஷூட்டிங்குகள் தொடங்கி ஓரளவு நிலைமை சரியாகி வந்தாலும் இன்னும் பலரும் வீட்டிலிருந்தே வேலை பார்த்து வந்தனர்,மீண்டும் கொரோனா இரண்டாவது அலை காரணமாக ஊரடங்கு போடப்பட்டு உள்ளது.

அதிகம் மக்களால் பார்க்கப்பட்ட தொடர்கள் மற்றும் படங்களின் லிஸ்டை BARC நிறுவனம் வாராவாரம் வெளியிட்டு வந்தனர்.கடந்த வாரத்திற்கான லிஸ்டை BARC தற்போது வெளியிட்டுள்ளது.முதல் இடத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான பிகில் படம் உள்ளது.இரண்டு மூன்றாவது இடங்களில் சன் டிவியின் வானத்தை போல மற்றும் வானதைப்போல தொடர்கள் இருந்தன.நான்கு மற்றும் ஐந்தாவது இடத்தில் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்கள் உள்ளன.

#Bigil 4th time telecast in @SunTV attained 1,20,26,000 BARC impressions 👍 #Master @actorvijay pic.twitter.com/iByp8T6457

— Vijay Team Online (@VijayTeamOnline) May 20, 2021