தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் தளபதி விஜய்.பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் இவரது படங்கள் வெளியானாலே திரையரங்கங்கள் திருவிழாவாக காட்சியளிக்கும்.இவரது பிகில் படம் கடந்த 2019 தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்தது.

இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தின் ரிலீஸ் கொரோனா காரணமாக தள்ளிப்போனது.இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி சமூகவலைத்தளங்களில் செம ஹிட் அடித்துள்ளது.இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர்.இந்த படத்தை இயக்கப்போவது யார் என்று பல கேள்விகள் சுற்றி வந்தன.கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் விஜயிடம் கதை சொல்லியுள்ளார் என்ற தகவலும் சமீபத்தில் கிடைத்தது.இன்று ஒரு மாபெரும் அறிவிப்பை வெளியிடுவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தனர்.

தற்போது இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.தளபதி 65 படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்குவார் என்றும் அனிருத் இந்த படத்திற்கு இசையமைப்பார் என்றும் தெரியவந்துள்ளது.இந்த படத்தின் அறிவிப்பை ஒரு வீடியோவாக படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

We are happy to announce Thalapathy @actorvijay ’s #Thalapathy65bySunPictures directed by @nelsondilpkumar and music by @anirudhofficial #Thalapathy65 pic.twitter.com/7Gxg1uwy22

— Sun Pictures (@sunpictures) December 10, 2020