தமிழ் சினிமாவின் வசூல் சக்ரவர்திகளில் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய்.இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2021 பொங்கல் அன்று மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.கொரோனாவுக்கு பிறகு வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மாஸ்டர்.

இதனை தொடர்ந்து விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர்.இந்த படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார்,அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு Gerogia-வில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.

இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கவிருந்தது ஆனால் கொரோனா காரணமாக இந்த ஷூட்டிங் தள்ளிப்போனது.படத்தின் இயக்குனர் நெல்சன் பிறந்தநாள் 21ஆம் தேதியும் படத்தின் நாயகன் விஜயின் பிறந்தநாள் 22ஆம் தேதியும் வருவதை அடுத்து , படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வரும் 21ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் டைட்டில் என்னவாக இருக்கும் என்று யோசிக்கவைக்கும் வகையில் ஒரு வீடீயோவை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளனர்.துப்பாக்கி,தோட்டா என்று ப்ரோமோ முழுக்க இருக்க பலரும் டைட்டில் இதுதானா என்று தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.டைட்டில் என்னவாக இருக்கும் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்

Namaku solradha vida seiradhu dhan romba easy! Senjurlama? 😎#Thalapathy65FLToday @ 6pm! #Thalapathy65FirstLook #Thalapathy65@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja pic.twitter.com/Mlys8bo2Ug

— Sun Pictures (@sunpictures) June 21, 2021