தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.இந்த படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.



இதனை தொடர்ந்து விஜய் நடிக்கவுள்ள படம் தளபதி 65.இந்த படத்தையும் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்றும் , இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர் என்றும் சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் என்றும் தகவல்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.



இது குறித்து விசாரித்தபோது இந்த செய்தி வெறும் வதந்தி தான் என்று நம்பத்தக்க வட்டாரங்களிடம் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளது.தளபதி 65 படத்தின் இயக்குனர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.