தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் தளபதி விஜய்.பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் இவரது படங்கள் வெளியானாலே திரையரங்கங்கள் திருவிழாவாக காட்சியளிக்கும்.இவரது பிகில் படம் கடந்த 2019 தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்தது.

இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தின் ரிலீஸ் கொரோனா காரணமாக தள்ளிப்போனது.இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி சமூகவலைத்தளங்களில் செம ஹிட் அடித்துள்ளது.இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர்.இந்த படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார் என்ற அறிவிப்பு நேற்று வெளியானது.இதனை தொடர்ந்து நெல்சனுக்கு பல தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

நெல்சனுடன் விஜய் டிவியில் இருந்து வேலை பார்த்த ராஜ்குமார் பெரியசாமி நெல்சனின் பழைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார்.விஜய் ரசிகரான நெல்சன் 2007-ல் அழகிய தமிழ் மகன் படத்தின் போஸ்டர் ஒன்றுடன் எடுத்துக்கொண்ட இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

#Thalapathy65 Wow 🤩 Nelson👍 Amazing announcement! You have earned it❤️Congratulations buddy💐 Dreams do come true👍 Picture below was taken in 2007😍@Nelsondilpkumar @anirudhofficial @sunpictures https://t.co/ZWrBIy2VJr pic.twitter.com/8GTlNXtaBg

— Rajkumar Periasamy (@Rajkumar_KP) December 10, 2020