விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என்று ஒரே ஆண்டில் 2 வெற்றி படங்களை கொடுத்து தனது ரசிகர்களை திருப்திபடுத்தியுள்ளார் நடிகர் அஜித். இதனை தொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த படம் வலிமை.இந்த படத்தை எச் வினோத் இயக்குகிறார்.



போனி கபூர் இந்த படத்தை தயாரிக்கிறார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் சில விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.இந்த படம் 2020 தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தில் ஹுமா குரேஷி ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.



இந்த படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.தற்போது இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் யோகி பாபு நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.விஸ்வாசம் படத்தை அடுத்து வலிமை படத்தில் யோகிபாபு இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.