தமிழ் திரையுலகில் தன்னிகரில்லா நாயகர்களில் ஒருவர் தல அஜித். நடிப்பு மட்டுமின்றி கேமரா, சமையல், கார், பைக் ரேஸ் போன்றவற்றில் அதிகம் ஆர்வமுடையவர். ஆளில்லா ட்ரோன் விமானங்களை இயக்குவதிலும் அஜித்திற்கு ஆர்வம் அதிகம். அதனால் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் தலைமை ஹெலிகாப்டர் ஆலோசகராகவும் பதவி வகித்தார்.

கடைசியாக நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க எச்.வினோத் இயக்கியிருந்தார்.அடுத்ததாக வலிமை படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் தல அஜித்.இந்த படத்தையும் எச்.வினோத் இயக்குகிறார்,போனி கபூர் தயாரிக்கிறார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

தெலுங்கு நடிகர் கார்த்திகேயா இந்த படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.ஹுமா குரேஷி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.குக் வித் கோமாளி புகழ்,யோகி பாபு,ராஜ் அய்யப்பா,சுமித்ரா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது.இந்த வருட இறுதியில் இந்த படம் ரிலீசாகும் என்ற தகவல் கிடைத்துள்ளது.ஆகஸ்ட் 2ஆம் தேதி இந்த படத்தின் நாங்க வேற மாரி என்ற ஓப்பனிங் பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

பொதுவாக பெரிய ஹீரோக்களின் பண்டங்களின் பாடல்கள் ஏதேனும் ஒரு ரெகார்டை செட் செய்யும் அப்படி இந்த படத்தின் பாடலும் 24 மணி நேரத்தில் 9 மில்லியன் பார்வையாளர்களை பெற்று தமிழில் 24 மணி நேரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட பாடல்கள் வரிசையில் முதலிடத்தை விஜயின் குட்டி ஸ்டோரி பாடலுடன் பகிர்ந்துகொண்டுள்ளது.

1️⃣ TRENDING
1️⃣ MILLION LIKES
9️⃣ MILLION REAL-TIME VIEWS#NaangaVeraMaari from #Valimai 🥁💥➡️ https://t.co/YaQX17TuAY#30YearsOfAjithKumar#AjithKumar #HVinoth @thisisysr @BayViewProjOffl @ZeeStudios_ @sureshchandraa @VigneshShivN @anuragkulkarni_ @SonyMusicSouth pic.twitter.com/1D4bafK9Wr

— Boney Kapoor (@BoneyKapoor) August 3, 2021