ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள படம் டெடி. இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஆர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா நடித்துள்ளார்.

திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து நடிக்கும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடைசியாக ஆர்யா மற்றும் சாயிஷா காப்பான் படத்தில் நடித்திருந்தனர். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து என இயக்குனர் பதிவு செய்துள்ளார்.

படத்திலிருந்து தனிமையே பாடல் பிப்ரவரி 14-ம் தேதி வெளியாகவுள்ளது. சித் ஸ்ரீராம் இந்த பாடலை பாடியுள்ளார். மதன் கார்கி இந்த பாடல் வரிகளை எழுதியுள்ளார்.