ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள படம் டெடி. இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா நடித்துள்ளார்.

திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து நடிக்கும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடைசியாக ஆர்யா மற்றும் சாயிஷா காப்பான் படத்தில் நடித்திருந்தனர். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து என இயக்குனர் பதிவு செய்துள்ளார்.

தற்போது படத்திலிருந்து தனிமையே பாடல் வெளியானது. சித் ஸ்ரீராம் பாடிய இந்த பாடல் வரிகளை மதன் கார்கி எழுதியுள்ளார். காதலர் தினத்தன்று இந்த பாடல் வெளியானதால் இளைஞர்கள் மத்தியில் பெரிதாக பேசப்பட்டு வருகிறது இந்த பாடல்.

Here we go! #Thanimaye ! To all singles out there on this Valentine’s Day! Sung by @sidsriram written by @madhankarky ! #TeddyFirstSingle @ShaktiRajan @arya_offl @sayyeshaa @StudioGreen2 #DImmanMusical Praise God!https://t.co/GpabimZxkS

— D.IMMAN (@immancomposer) February 14, 2020