இயக்குனர் செல்வராகவனின் உதவியாளரான யுவராஜ் சுப்பிரமணி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டாணா. தரமான ஸ்கிரிப்ட்டுகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் வைபவ் இதில் நாயகனாக போலீஸ் ரோலில் நடிக்கிறார். நோபிள் மூவி ப்ரொடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.

.

நந்திதா ஸ்வேதா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் யோகிபாபு,பாண்டியராஜன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சிவா GRN ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

.

சமீபத்தில் இதன் ட்ரைலர் வெளியாகி இணையத்தை ஈர்த்தது. ஜனவரி 24-ம் தேதி வெளியாகும் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்புகள் உள்ளது. படத்திற்கு U சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனால் ஃபேமிலி ஆடியன்ஸின் வருகை அதிகமிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது படத்திலிருந்து மிஸ்டேரோ பாடல் வெளியானது. MCD பாடிய இந்த பாடல் வரிகளை கு.கார்த்திக் எழுதியுள்ளார்.

.