தனுஷ் நடிப்பில் கடந்த 2007-ல் வெளியான பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அடுத்ததாக ஆடுகளம்,விசாரணை,வடசென்னை,அசு
இதனை தொடர்ந்து சூரி ஹீரோவாக விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன்.இதற்கு அடுத்து சூர்யா நடிப்பில் தயாராகவுள்ள வாடிவாசல் திரைப்படத்தை இயக்கவுள்ளார்.இந்த படத்தினை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார்.
ஜீ வி பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.ஜல்லிக்கட்டை மையமாக வைத்து இந்த படம் உருவாகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் அறிவிப்பு போஸ்டர் கடந்த வருடம் வெளியிடப்பட்டது,ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது இந்த போஸ்டர்.
இதனை தொடர்ந்து இந்த படத்தின் அப்டேட் எப்போது வெளியாகும் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர்.தற்போது செம சர்ப்ரைஸ் அறிவிப்பாக படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் நாளை வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளனர்.இந்த போஸ்டரின் ரிலீஸை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
வாடிவாசல் பற்றிய அறிவிப்பிற்காக ஆவலுடன் எதிர்பார்த்திருந்த தமிழ் நெஞ்சங்களுக்கு நல்விருந்தாய், #வாடிவாசல் திரைப்படத்தின் டைட்டில் லுக்கை நாளை மாலை 5:30'க்கு வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன். #VaadiVaasalTitleLookTomorrow @Suriya_offl @VetriMaaran @gvprakash #VaadiVaasal pic.twitter.com/PCJj6fJaVA
— Kalaippuli S Thanu (@theVcreations) July 15, 2021