2D என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் சூரரைப் போற்று. நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க அவருடன் கருணாஸ், மோகன் பாபு, காளி வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜாக்கி ஆர்ட் டைரக்ஷன் செய்துள்ளார்.

ஓய்வு பெற்ற ராணுவ தளபதி ஏர் டெக்கான் கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. இதில் நெடுமாறன் ராஜாங்கம் என்ற பாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். படத்தின் மாறா தீம் பாடல் மற்றும் வெய்யோன் சில்லி பாடல்கள் வெளியாகி சக்கை போடு போட்டது. படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது.

படத்திற்கு U சான்றிதழ் வழங்கிய சென்சார் குழுமம், படக்குழுவினரை சமீபத்தில் பாராட்டியது. லாக்டவுன் முடிந்து இயல்பு நிலை திரும்பியவுடன் திரையரங்கில் வெளியாகும் முதல் பெரிய பட்ஜெட் திரைப்படம் இதுவாக தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் கதை மற்றும் உருவான விதத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கடைசியாக சூர்யாவின் பிறந்தநாளில் காட்டு பயலே பாடலை வெளியிட்டனர் படக்குழுவினர். இந்த பாடலின் ப்ரோமோ வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். இந்த ரொமான்டிக் ப்ரோமோ திரை விரும்பிகளை ஈர்த்து வருகிறது. பாடகி தீ பாடிய இந்த பாடல் வரிகளை கவிஞர் சினேகன் எழுதியுள்ளார்.

தற்போது இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷை பாராட்டி சூர்யா பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில் ஒவ்வொரு முறையும் உங்கள் இசையில் புதிதாக கண்டுபிடிப்பதை பார்த்து ஈர்க்கப்பட்டிருக்கிறேன். சூரரைப் போற்று பாடல்கள் கூடுதல் சிறப்பானதற்கு நீங்கள் தான் காரணம் என்று பாராட்டியுள்ளார். இதற்கு பதிலளித்த ஜிவி பிரகாஷ், இன்னும் நிறைய வர உள்ளது சார் என்று கூறியுள்ளார்.

லாக்டவுன் முடிந்து இயல்பு நிலை திரும்பியவுடன் ஹரி இயக்கத்தில் அருவா, வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் வாடிவாசல் போன்ற படங்களின் படப்பிடிப்பில் சூர்யா கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. வாடிவாசல் படத்திற்கும் ஜிவி பிரகாஷ் தான் இசை என்பது கூடுதல் தகவல்.

Totally inspired by the way you reinvent yourself every time, thank u for making #SooraraiPottru more spl @gvprakash #KaattuPayale https://t.co/UQYRqB7S2z

— Suriya Sivakumar (@Suriya_offl) August 5, 2020