உலகையே அச்சுறுத்தி வரும் COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.தமிழகத்தில் இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் அதனை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு தங்களால் முடிந்த வேலைகளை செய்து வருகின்றனர்.



கொரோனா குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இதனால் பலதரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

மதுரை எம்பி வெங்கடேசன் அவர்கள் அன்னவாசல் என்ற திட்டத்தை ஆரம்பித்து மதுரை மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஊரடங்கு நேரத்தில் உணவில்லாமல் கஷ்டப்படும் பலருக்கு உணவுகளை அளித்து வருகிறார். அவருடைய இந்த திட்டத்திற்கு பலர் நிதியுதவி செய்துவந்தனர்.



தற்போது நடிகர் சூர்யா மதுரை அன்னவாசல் திட்டத்திற்கு ரூ.5 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட எம்பி வெங்கடேசன் கூறியுள்ளதாவது நல்ல முன்னெடுப்புக்கள் பல நல்ல உள்ளங்களை ஒருங்கிணைத்துக் கொண்டே நகரும். அப்படியான நகர்வில்,"ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல்" என்பது வள்ளுவன் மொழி. 'அகரம்' மூலம் ஏழை மக்களின் கல்விப் பசி ஆற்றி வருபவர் திரைக்கலைஞர் சூர்யா. இப்போது 'ஆகாரம்' மூலம் அன்னவாசல் வழி வந்து விளிம்பு நிலை மனிதரின் பசியாற்றவும் முன்வந்துள்ளார். தன் பங்களிப்பாக 5 இலட்சம் நன்கொடையாக அன்னவாசலில் சோறூட்ட அளித்த அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

#அன்னவாசல் திட்டத்துக்கு@Suriya_offl
ஐந்து லட்சம் #நன்கொடை

சு.வெங்கடேசன் எம்.பி நன்றி!

நல்ல முன்னெடுப்புக்கள் பல நல்ல உள்ளங்களை ஒருங்கிணைத்துக் கொண்டே நகரும். அப்படியான நகர்வில், தன் பங்களிப்பாக 5 இலட்சம் நன்கொடையாக அன்னவாசலில் சோறூட்ட அளித்த@agaramvision
1/2 pic.twitter.com/AFD1PyjKAJ

— Su Venkatesan MP (@SuVe4Madurai) May 11, 2020