வந்தா ராஜாவாதான் வருவேன் படத்திற்கு பிறகு STR , ஹன்சிகா நடிக்கும் மகா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து STR45 படத்திலும்,வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த வருடம் தொடங்கி கொரோனா காரணமாக ஷூட்டிங் பாதிக்கப்பட்டது.கல்யாணி ப்ரியதர்ஷன் இந்த படத்தின் ஹீரோயினாக நடிக்கிறார்.எஸ்.ஏ.சந்திரசேகர்,பாரதிராஜா,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.யுவன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

STR என்ன செய்தாலும் அவரை பற்றி என்ன செய்தி வந்தாலும் அது வைரலாகி விடும்.சமீபத்தில் இவரது சமையல்,ஜாகிங் வீடியோக்கள் வைரலாகி வந்தன.கெளதம் மேனன் இயக்கிய குறும்படத்திலும் வீட்டிலிருந்தே நடித்து கொடுத்திருந்தார்.

மாநாடு படத்திற்கு முன் STR பாண்டியநாடு,ஜீவா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கிய சுசீந்திரன் இயக்கத்தில் தயாராகியுள்ள ஈஸ்வரன் படத்தில் நடித்திருந்தார்.மாதவ் மீடியா ஒர்க்ஸ் மற்றும் D கம்பெனி இணைந்து தயாரிக்கின்றனர்.நிதி அகர்வால் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த லாக்டவுன் நேரத்தில் சிம்பு உடலெடையை குறைத்து செம ட்ரான்ஸபார்மேஷன் ஆகியுள்ளார் என்று பலரும் தெரிவித்து வந்தனர்.ஈஸ்வரன் படத்தின் பர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளியாகி அவர் செம ஸ்மார்ட்டாக ஸ்லிம்மாக மாறியுள்ளதை ரசிகர்கள் பார்த்து கொண்டாடி வந்தனர்.இந்த படத்தின் வேலைகள் அனைத்தையும் விறுவிறுவென முடித்து கொடுத்தார் சிம்பு.

சிம்புவின் ட்ரான்ஸபார்மேஷனை பார்த்து பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.இந்த படம் பொங்கல் 2021க்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது.இந்த படத்தின் டீஸர் தீபாவளிக்கு வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தின் முதல் பாடல் வரும் டிசம்பர் 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தனர்.தற்போது இந்த பாடலின் தகவல்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.தமிழன் பாட்டு என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பாடலை அனந்து,தீபக் மற்றும் தமன் இணைந்து பாடியுள்ளனர்.யுகபாரதி இந்த பாடலுக்கு பாடல்வரிகள் எழுதியுள்ளார்.இந்த பாடலின் ரிலீஸை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

#TAMIZHANPATTU #Eeswaranfirstsingle from 14 December 2020#Eeswaran #SilambarasanTR
#STR pic.twitter.com/hOSxSyRTMC

— Silambarasan TR (@SilambarasanTR_) December 12, 2020