வந்தா ராஜாவாதான் வருவேன் படத்திற்கு பிறகு STR , ஹன்சிகா நடிக்கும் மகா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து STR 45 படத்திலும் நடித்து வந்தார்.வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவிருக்கும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன் தொடங்கியது.கல்யாணி ப்ரியதர்ஷன் இந்த படத்தின் ஹீரோயினாக நடிக்கிறார்.எஸ்.ஏ.சந்திரசேகர்,பாரதிராஜா,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.யுவன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

கொரோனா காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போயுள்ளது.STR என்ன செய்தாலும் அவரை பற்றி என்ன செய்தி வந்தாலும் அது வைரலாகி விடும்.சமீபத்தில் இவரது சமையல்,ஜாகிங் வீடியோக்கள் வைரலாகி வந்தன.கெளதம் மேனன் இயக்கிய குறும்படத்திலும் வீட்டிலிருந்தே நடித்து கொடுத்திருந்தார்.சில நாட்களாக இவர் லண்டனில் உள்ள தனது உறவுக்கார பெண் ஒருவரை திருமணம் செய்யப்போகிறார் என்ற செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வந்தது.இதுகுறித்து நெருங்கிய வட்டாரங்களிடம் விசாரித்தபோது இந்த செய்தி வெறும் வதந்தி தான் என்பது தெரியவந்துள்ளது.