எட்ஸெட்ரா எண்டர்டெயிமென்ட் நிறுவனம் தயாரிப்பில் நடிகை ஹன்சிகாவின் 50-வது படமாக உருவாகியுள்ள திரைப்படம் மஹா. இந்த படத்தில் நடிகர் STR விமானியாக நடித்துள்ளார் என்ற தகவல் தெரியவந்தது. யு.ஆர்.ஜமீல் இயக்கி வரும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

வாலு படத்திற்கு பிறகு சிம்பு மற்றும் ஹன்சிகா இணைந்து நடிப்பதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்றே கூறலாம். படத்திலிருந்து எஸ்.டி.ஆர் மற்றும் ஹன்சிகா இணைந்திருக்கும் படப்பிடிப்பு தள வீடியோக்கள் வெளியாகி இணையத்தை தெறிக்க விட்டது. STR-ன் பைலட் லுக் கொண்ட போஸ்டர் வெளியாகி பட்டையை கிளப்பியது. சனம் ஷெட்டி முக்கிய ரோலில் நடிக்கிறார்.

தற்போது படத்தின் வில்லன் ஸ்ரீகாந்த் என்பது தெரியவந்தது. படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு போய் கொண்டிருக்கிறது. STR நடித்த முக்கிய காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கவிருக்கும் மாநாடு படத்தில் நடிக்கவுள்ளார் STR.