தமிழ் திரையுலகில் மக்கள் விரும்பும் நகைச்சுவை கலைஞனாக திகழ்பவர் சூரி. பல படங்களில் சின்ன சின்ன ரோலில் நடித்த இவருக்கு வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. சூரியின் எதார்த்தமான காமெடி பல ரசிகர்களை இவருக்கு பெற்றுத்தந்தது. விஜய், அஜித், விஜய்சேதுபதி, விஷால், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

லாக்டவுன் முழுவதும் தனது குடும்பதினருடன் நேரத்தை செலவு செய்தார் சூரி. குழந்தைகளை குளிக்க வைப்பது, வீட்டை சுத்தம் செய்வது. அவ்வப்போது கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசுவது என சூரி வெளியிட்ட வீடியோக்கள் அனைத்தும் ரசிகர்களை ஈர்த்தது.

கடந்த லாக்டவுனில் சூரி செய்த சிறப்பான காரியம் என்னவென்றால், மதுரை மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தியது. வீட்டில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடங்களை நினைவுப்படுத்தும் வகையில் சிரிப்போம், சிந்திப்போம் என்ற தலைப்பில் நடிகர் சூரி கலந்துரையாடல் செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும் தனது கருப்பன் காளையுடன் கம்மாய்க்கரைக்கு செல்லும் புகைப்படத்தை வெளியிட்டு அசத்தினார். அதன் பிறகு ஜிம்மில் இருந்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டார்.

பொன்ராம் இயக்கத்தில் வெளியான சீமராஜா படத்தின் ஒரு காமெடி காட்சிக்காக சூரி சிக்ஸ்பேக் வைத்து மிரட்டி இருந்தார். இந்நிலையில், தற்போது தனது சிக்ஸ் பேக் உடம்பை காட்டியபடி போஸ் கொடுத்து எடுத்த புகைப்படத்தை நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், என் உடலை உறுதி செய்த மாஸ்டர் சரவணனுக்கு நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார். சூரியின் சிக்ஸ் பேக்கை பார்த்த ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டு பிள்ளை மற்றும் விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்திலும் நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், மீனா, சதீஷ், குஷ்பு மற்றும் நயன்தாரா ஆகியோர் நடிக்கவுள்ளனர். வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.

படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதெராபாத் போன்ற பகுதிகளில் நடந்து முடிந்தது. கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு முடிந்து இயல்பு நிலை திரும்பியவுடன் அண்ணாத்த படப்பிடிப்பில் சூரி கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் சந்தானம், யோகி பாபுவை தொடர்ந்து சூரியும் இப்போ ஹீரோ ஆகப் போகிறார். அதுவும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்த சிக்ஸ்பேக் தோற்றம் வெற்றிமாறன் படத்துக்கா என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர் சூரி ரசிகர்கள்.

I would like to thank @vasanthsarwan My personal coach for the constant support and motivation ! என் உடலை உறுதி செய்த மாஸ்டர் சரவணனுக்கு நன்றி...🙏🏋️‍♂️💪 pic.twitter.com/L60BzsDDeH

— Actor Soori (@sooriofficial) September 19, 2020