சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் சூரரைப் போற்று. நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க அவருடன் கருணாஸ், மோகன் பாபு, காளி வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

ஓய்வு பெற்ற ராணுவ தளபதி ஏர் டெக்கான் கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் நெடுமாறன் ராஜாங்கம் என்ற பாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். படத்தின் மாறா தீம் பாடல் மற்றும் வெய்யோன் சில்லி சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்டது. படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது.

படத்தின் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியானது. நேற்று லைவ்வில் வந்த இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் படத்தின் அடுத்த பாடலான காட்டுப்பயலே குறித்து தெரிவித்தார். இந்த பாடலை பாடகி தீ பாடியுள்ளார். சினேகன் பாடல் வரிகள் எழுதியுள்ளார். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் சூர்யா ரசிகர்கள்.

• Exclusive : @Suriya_offl's #SooraraiPottru next single track titled as #KaattuPayale (#காட்டுப்பயலே) Sung by #Thee (After Rowdy Baby) & Lyrics by #Snehan
~ @GVPrakash pic.twitter.com/DFyD02vnAY

— Suriya Fans Trends ™ (@Suriya_Trends) April 24, 2020