சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள படம் சூரரைப் போற்று. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ஆஸ்கார் விருது பெற்ற குனிட் மோங்கா துணை தயாரிப்பாளராக பணிபுரிகிறார்.

.

நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க அவருடன் கருணாஸ், மோகன் பாபு, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஓய்வு பெற்ற ராணுவ தளபதி ஏர் டெக்கான் கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

.

சமீபத்தில் படத்தின் டீஸர் மற்றும் மாறா தீம் பாடல் வெளியாகியது. தற்போது பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தன்று ரொமான்டிக் பாடல் வெளியிடலாமா என்று இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பதிவு செய்துள்ளார். இப்பதிவை கொண்டாடி வருகின்றனர் சூர்யா ரசிகர்கள்.

.