காப்பான் படத்தை தொடர்ந்து சூர்யா இறுதி சுற்று பட இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகியுள்ள சூரரை போற்று திரைப்படத்தில் நடித்துள்ளார்.அபர்ணா பாலமுரளி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.சூர்யாவின் 2D என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

மோகன் பாபு,கருணாஸ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.GV பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் தீம் பாடல் மற்றும் ரொமான்டிக் பாடல் அதோடு ஒரு குத்து பாடல் என்று மூன்று பாடல்கள் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததது.இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகவிருந்தது.

கொரோனா காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் சற்று தாமதமாகியுள்ளது.இந்த படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் ஆக ரசிகர்களுக்கு ரிலீஸ் செய்தனர் படக்குழுவினர்.சூர்யாவின் ஒர்க்கவுட் மற்றும் சில ஷூட்டிங் ஸ்பாட் விடீயோக்கள் அடங்கிய இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் பாடல் ஒன்றை அருண்ராஜா எழுதியுள்ளார் என்ற அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டார் அந்த பாடலை விரைவில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த படம் நேரடியாக OTT-யில் வெளியாவுள்ளது என்று தகவல்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தன.இந்த படம் நிச்சயம் திரையரங்குகளில் வெளியாகும் என்று ரசிகர்களுக்கு படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.இதனை அடுத்து கொரோனா பாதிப்பு குறைந்த பின் இந்த படத்தை திரையரங்குகளில் எதிர்பார்க்கலாம்.இந்த படத்தின் சென்சார் வேலைகள் நிறைவடைந்து படத்திற்கு யூ சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே மூன்று பாடல்கள் வெளியான நிலையில் தற்போது புதிய பாடல் குறித்த அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.ஜூலை 23ஆம் தேதி சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த பாடலின் 1 நிமிட வீடியோ வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.காட்டுப்பயலே என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பாடலை ரௌடி பேபி புகழ் தீ பாடியுள்ளார்.சூர்யாவின் பிறந்தநாள் அன்று விசுவலாக ரசிகர்களை மகிழ்விக்க படக்குழுவினர் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

1 Min video of #KaattuPayale awaits you on 23rd July @ 10AM!
Sung by #dhee#SooraraiPottru#KaatukaKanule #AakasamNeeHaddhuRa@Suriya_offl #SudhaKongara @rajsekarpandian @nikethbommi @Aparnabala2 @deepakbhojraj @PoornimaRamasw1 @gopiprasannaa pic.twitter.com/QoroDifv5Z

— G.V.Prakash Kumar (@gvprakash) July 19, 2020