கடந்த வருடத்தின் மிகச் சிறந்த திரைப்படங்களில் ஒன்று சூரரைப்போற்று. தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த திரைப்படங்களின் வரிசையில் கட்டாயம் இடம் பிடிக்கக் கூடிய ஒரு திரைப்படம். இறுதிச்சுற்று திரைப்படத்தை இயக்கிய சுதா கொங்கராவின் அடுத்த படைப்பாக வெளிவந்தது இந்த சூரரைப்போற்று. “சிம்பிளிஃப்லை டெக்கான்” நிறுவனர் ஜிஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை தழுவி சூரரைப்போற்று திரைப்படம் தயாரானது.

நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் நடிகர் சூர்யா நெடுமாறன் ராஜாங்கம் என்னும் கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். சுந்தரியாக நடிகை அபர்ணா முரளியின் நடிப்பு மிகவும் கச்சிதமாக அந்த கதாபாத்திரத்திற்கு பொருந்தியது. திரைப்படத்தின் ஒரு மிகப்பெரிய பலம் என்றால் அது ஜி வி பிரகாஷ் குமார். ஜீவியின் பின்னணி இசையும் பாடல்களும் திரைப்படத்தை வேறு தளத்திற்கு கொண்டுசேர்த்தது. நிக்கேட் பொம்மியின் ஒளிப்பதிவும் சதீஷ் சூர்யாவின் படத்தொகுப்பும் திரைப்படத்திற்கு மிகப் பொருத்தமாக அமைந்தது.

அனைத்து அம்சங்களும் ஒருசேர பெற்ற சூரரைப்போற்று திரைப்படம் எப்போது திரைக்கு வரும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா ஊரடங்கால் படத்தின் வெளியீடு தள்ளிப் போனது. ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படம் தீபாவளி வெளியீடாக OTT தளத்தில் வெளியானது. திரையரங்கில் இத்திரைப்படத்தை காண முடியாமல் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தாலும் சிறந்த திரைப்படமாக மக்களை இயற்கை திரைப்படம் தவறவில்லை.

பல சர்வதேச விருதுகளுக்கு சூரரைப்போற்று பரிந்துரைக்கப்பட்ட நிலையில் ஷாங்காயில் நடைபெறும் ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் பனோரமா பிரிவில் நுழைந்த சூரரைப்போற்று திரைப்படம். மேலும் ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் சூரரைப் போற்று திரைப்படம் திரையிடப்படவுள்ளது. தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளிலும் வெளியான இத்திரைப்படம் இந்தியா முழுவதும் பலரால் ரசிக்கப்பட நிலையில் சர்வதேச அரங்கில் தமிழ் சினிமாவின் பெருமையை பறைசாற்றும் விதமாக ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது தமிழ் ரசிகர்களின் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஷாங்காய் இன்டர்நேஷனல் பிலிம் ஃபெஸ்டிவலில் பனோரமா பிரிவில் நுழைந்த சூரரைப் போற்று திரைப்படம். @Suriya_offl #SudhaKongara @gvprakash @2D_ENTPVTLTD @rajsekarpandian #SooraraiPottru pic.twitter.com/5UUrj87eww

— Galatta Media (@galattadotcom) May 13, 2021