தமிழ் திரையுலகில் நடிகர், காமெடியன், பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத்திறன் கொண்டவர் பிரேம்ஜி. இசை சுனாமியான பிரேம்ஜிக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் நெட்டிசன்களில் இவரும் ஒருவர். இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி, 2003-ம் ஆண்டு வெளியான விசில் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.

அதன் பின் தொடர்ந்து பல வெற்றி படங்களில் பிரேம்ஜி நடித்தார். வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 28 திரைப்படத்தில் பிரேம்ஜி பேசிய என்ன கொடுமை சார் இது வசனம் இவரை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது. படங்களில் நடித்துள்ளார். அதன் பின் தல அஜித்தின் மங்காத்தா படத்தில் அவரது நடிப்பிற்கு நல்ல வரவேற்பை பெற்றது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். கடந்த 6 மாதங்களாக கொரோனா அச்சுறுத்தல் மற்றும் லாக்டவுன் காரணமாக படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாமல் இருந்தது. இதனால் நடிகர்கள் மற்றும் நடிகைகள் பலரும் வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருந்தனர். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்த பிரேம்ஜி 6 மாதங்களாக தாடி மீசை, நீண்ட முடி என சமூக வலைதளங்களில் மிரட்டி வந்தார். அதனை பார்த்து ரசிகர்கள் பலரும், தலைவரே கைலாசா நாட்டுக்கு போகப் போகிறீர்களா என கிண்டலடித்து வந்தனர்.

சமீபத்தில் நடிகர் பிரேம்ஜி தனது டிவிட்டர் பக்கத்தில் முடியை வெட்டி க்ளீன் ஷேவ் செய்துள்ள போட்டோவை ஷேர் செய்துள்ளார். பிரேம்ஜி தற்போது சுரேஷ் சங்கையா இயக்கத்தில் உருவாகிவரும் சத்திய சோதனை படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். கிராமத்துப் பின்னணியில், முழுக்க காமெடி பாணியில் இந்த படம் தயாராகி வருகிறது. கிராமப்புறப் பகுதிகளில் இருக்கும் காவல் நிலையங்கள் மற்றும் நீதிமன்றம் ஆகியவற்றில் நடக்கும் நிகழ்வுகளை மையப்படுத்திய கதை என்று கூறப்படுகிறது.

இந்த படத்தில் ஸ்வயம் சித்தா, பிக் பாஸ் ரேஷ்மா, ஞானசம்பந்தம், கே.ஜி.மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் மிக முக்கியக் கதாபாத்திரத்தில் லட்சுமி பாட்டி நடித்துள்ளார். பிரேம்ஜிக்கும் லட்சுமி பாட்டிக்கும் இடையே நடக்கும் காட்சிகள் மிக சுவாரஸ்யமாக இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை நடிகர் மாதவன் வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சிவகார்த்திகேயன் நாளை வெளியிடுகிறார். சரண் ஆர்வி ஒளிப்பதிவாளராக பணியாற்றும் இந்த படத்திற்கு வெங்கட் எடிட் செய்கிறார். சூப்பர் டாக்கீஸ் சார்பில் சமீர் பரத் ராம் இந்த படத்தை தயாரிக்கிறார். ரகுராம் இசையமைக்கிறார். சத்திய சோதனை படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் போய் கொண்டிருப்பதாக சமீபத்தில் பிரேம்ஜி தெரிவித்திருந்தார். சமீபத்தில் இந்த படத்திற்கான டப்பிங் பணிகள் நிறைவடைந்தது.

Thanks a lot bro 🙏🙏🙏 @Siva_Kartikeyan pic.twitter.com/qlUxqjlrHv

— PREMGI (@Premgiamaren) October 1, 2020