சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் படம் SK-14.இந்த படத்தை இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்குகிறார்.இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.24AM Studios இந்த படத்தை தயாரிக்கிறது.

யோகி பாபு,கருணாகரன்,ஈஷா கோபிகர்,பாலசரவணன் என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளது.இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் சமீபத்தில் தொடங்கியது.

இந்த படத்தின் டைட்டில் சில நாட்களில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.தற்போது இந்த படத்தின் சண்டைக்காட்சி விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது என்று படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துவரும் ஷரத் கேல்கர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

#sk14 #tamilcinema #actionsequence @Siva_Kartikeyan #ravikumar #SKravikumarfilm #chennai pic.twitter.com/NKGYyYtLlf

— Sharad Kelkar (@SharadK7) February 1, 2020