தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.கடைசியாக பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளியான ஹீரோ படத்தில் நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிகுமாருடன் அயலான், இயக்குனர் நெல்சன் திலீப்குமாருடன் டாக்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.இந்த இரண்டு படங்களின் பர்ஸ்ட்லுக்கும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.அயலான் மற்றும் டாக்டர் படங்களின் ரிலீஸை எதிர்நோக்கி காத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் 2018-ல் வெளியான படம் சீமராஜா.வருத்தப்படாத வாலிபர் சங்கம்,ரஜினி முருகன் படங்களை இயக்கிய பொன்ராம் இந்த படத்தை இயக்கியிருந்தார்.சமந்தா இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.டி இமான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.தற்போது இந்த படத்தின் சூப்பர்ஹிட் மெலடி பாடலான உன்னவிட்டா யாரும் எனக்கில்ல பாடல் வீடியோ யூடியூப்பில் 60 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

#60MviewsforOnnaVitta #SeemaRaja #Sivakarthikeyan @YugabhaarathiYb @24AMSTUDIOS @sooriofficial @SimranbaggaOffc https://t.co/aEnp4HrAvE

— Think Music (@thinkmusicindia) June 24, 2021