சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான படம் நம்ம வீட்டு பிள்ளை.இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.அணு இம்மானுவேல் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

யோகிபாபு,சூரி,நடராஜன்,RK சுரேஷ்,பாரதிராஜா,சமுத்திரக்கனி,மீரா மிதுன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துதுள்ளனர்.இந்த படம் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து குடும்ப படமாக வெளியான இந்த படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் செம ஹிட் அடித்திருந்தன.மேலும் இந்த படம் TRP ரேட்டிங்களிலும் புதிய சாதனைகளை படைத்தது.2019-ல் அதிகம் வசூல் செய்த படங்களில் ஒன்றாக நம்ம வீட்டு பிள்ளை படம் இருந்தது.இந்த படத்தின் பாடல்கள் யூடியூப் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் பல சாதனைகளையும் படைத்துள்ளது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயன் எழுதிய காந்தகண்ணழகி பாடலின் வீடியோ குழந்தைகளிடம் செம வைரலாக இருந்த இந்தது. இந்த பாடல் தொடர்ந்து பல சாதனைகளை படைத்தது வருகிறது.தற்போது யூடியூப்பில் 200 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது

MASSIVE 200MILLION+ VIEWS FOR #GAANDAKANNAZHAGI SONG FROM #NAMMAVEETTUPILLAI #DIMMANMUSICAL

Sung by Anirudh Ravichander,Neeti Mohan

Lyric by Sivakarthikeyan

Praise God!https://t.co/psfSBfFMzB

— D.IMMAN (@immancomposer) July 30, 2021