தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.கடைசியாக பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளியான ஹீரோ படத்தில் நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிகுமாருடன் அயலான்,கோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சன் திலீப்குமாருடன் டாக்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.இந்த இரண்டு படங்களின் பர்ஸ்ட்லுக்கும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த இரண்டு படங்களின் ஷூட்டிங்கையுமே சமீபத்தில் முடித்திருந்தார் சிவகார்த்திகேயன்.இவர் நடிக்கும் அடுத்த படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த படத்திற்கு டான் என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தின் அறிவிப்பு மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம ட்ரெண்ட் அடித்து வருகிறது.இந்த படத்தில் ஹீரோயினாக டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த பிரியங்கா மோகன் நடிக்கிறார்.எஸ்.ஜே.சூர்யா,சமுத்திரக்கனி,சூரி,முனீஸ்காந்த்,காளி வெங்கட்,பாலா சரவணன்,RJ விஜய்,சிவாங்கி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.இந்த படத்தின் சண்டைக்காட்சி ஒன்று சிறப்பாக வந்துள்ளதாக ஸ்டண்ட் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Wrapped a stunt sequence for #Don
Happy to have worked along with this fantastic energetic team! Looking forward to the next schedule for another raging stunt♥️@SKProdOffl @LycaProductions @Siva_Kartikeyan @Dir_Cibi @anirudhofficial #SIVAKARTHIKEYAN #VickyStuntMaster pic.twitter.com/klLHLFx6jD

— Vicky Stunt Director (@VickyStunt_dir) March 11, 2021