தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.கடைசியாக பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளியான ஹீரோ படத்தில் நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிகுமாருடன் அயலான்,கோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சன் திலீப்குமாருடன் டாக்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.இந்த இரண்டு படங்களின் பர்ஸ்ட்லுக்கும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த இரண்டு படங்களின் ஷூட்டிங்குமே கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்தது.

படங்களில் நடிப்பது மட்டுமின்றி கனா,நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளராகவும் சிவகார்த்திகேயன் இருந்துள்ளார்.இவர் தயாரிப்பில் உருவாகியுள்ள வாழ் திரைப்படம் கொரோனா பாதிப்பு சரியான பின் வெளியாகும் என்று தெரிகிறது.இதனை தவிர சில பாடல்களுக்கு படலாசிரியராகவும் பணியாற்றியுள்ளார் சிவகார்த்திகேயன்.

கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு இவரது டாக்டர் மற்றும் அயலான் படங்களின் ஷூட்டிங்குகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன.இந்த இரண்டு படங்களின் ஷூட்டிங்கையுமே சமீபத்தில் முடித்திருந்தார் சிவகார்த்திகேயன்.இவர் நடிக்கும் அடுத்த படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்திற்கு டான் என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தின் அறிவிப்பு மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம ட்ரெண்ட் அடித்து வருகிறது.தற்போது இந்த படத்தில் முக்கிய வேடத்தில் இயக்குனரும்,நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இவருடன் சமுத்திரக்கனியும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy to welcome @iam_SJSuryah onboard for #DON @Siva_Kartikeyan @anirudhofficial @KalaiArasu_ @SKProdOffl @Dir_Cibi @DONMovieOffl @DoneChannel1 pic.twitter.com/p1kOQJ1Hks

— Lyca Productions (@LycaProductions) February 3, 2021

Happy to welcome @thondankani onboard for #DON @Siva_Kartikeyan @anirudhofficial @priyankaamohan @iam_SJSuryah @KalaiArasu_ @SKProdOffl @Dir_Cibi @DONMovieOffl @DoneChannel1 pic.twitter.com/rgBfX64P1C

— Lyca Productions (@LycaProductions) February 3, 2021